Thursday, October 16, 2025
No menu items!
HomeSri Lanka Newsமீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'ஜாடி' மூலம் மீன்களைப் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும்...

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘ஜாடி’ மூலம் மீன்களைப் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும் செயல் முறை பயிற்சி வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை ஜாடி மூலம் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும் செயல் திட்ட பயிற்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) வழங்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதோடு மீனை கருவாடு மற்றும் ஏனைய முறைகளில் பதனிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் தமது வீட்டுத் தேவைக்காக கூட மீனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் மீனை எவ்வித இரசாயன பதார்த்தங்களும் பயன்படுத்தாது ‘ஜாடி’ முறையில் பதப்படுத்தும் பயிற்சி இன்றைய தினம் (28) வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு இரணைமாதா நகர் மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

-இதன் போது இரணைமாதா நகர்,அன்பு புரம்,முழங்காவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 35 மீனவ பெண்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சியை நிறைவு செய்தனர்.

குறித்த பயிற்சி மற்றும் செயல்முறையில் மன்னார் மாவட்ட முன்னால் கடற்றொழில் உதவி பணிப்பாளர் ஏ.மெராண்டா கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மன்னார் மாவட்ட பிரதி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பயிற்சியின் போது மீன்களை கொள்வனவு செய்து சுத்தப்படுத்தி எவ்வித ரசாயன பொருட்களும் இன்றி உப்பு மற்றும் கொருக்கா புளி ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்தி ‘ஜாடி’ முறையில் மீன்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செய்முறை பயிற்சியும் வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments