தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின்(sri lanka) வடக்குப் பகுதியை அண்டியதாக தமிழ்நாடு (tamilnadu)கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.