Thursday, October 16, 2025
No menu items!
HomeSri Lanka Newsகடின உழைப்பால் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் பெண்!

கடின உழைப்பால் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் பெண்!

பிலிப்பைன்ஸ்சில் நடைபெற்ற ஆசியாவின் மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்றமைக்கு தமது கடின உழைப்பே காரணம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அகிலதிருநாயகி தெரிவித்துள்ளார்.

இலங்கையை பிரதநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களைவெற்றிகொண்டமை குறித்து பெரும் மகிழ்ச்சி அடைவதாக ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவிற்கு வழங்கிய நேர்காணலில் அகிலதிருநாயகி குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன், வெண்கலப்பதக்கமொன்றையும் கைப்பற்றினார்.

1500m ஓட்டம் மற்றும் 5000m விரைவு நடை போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றிய முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தரான அகிலதிருநாயகி, 5000m ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments