Thursday, October 16, 2025
No menu items!
HomeSri Lanka Newsகுழந்தைகள் இடையே பரவும் பல நோய்கள்!

குழந்தைகள் இடையே பரவும் பல நோய்கள்!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் இன்றைய காலத்தில் சிறுவர்களிடையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்றைய நாட்களில் மேல் சுவாசக்குழாய் நோய்களான இருமல், சளி, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் போன்றவை குழந்தைகளிடையே பரவி வருகின்றன. மேலும், hand foot mouth disease என்ற நோய் உள்ளது. அதனால், இருமல், சளி, காய்ச்சல் உங்கள் குழந்தைகளை இருந்தால் பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்.வாயைச் சுற்றி சிவப்பு புள்ளிகள் மற்றும் கைகளில் சிவப்பு புள்ளிகள் இருந்தால், hand foot mouth disease நோயாக இருக்கலாம். அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள்.சில நாட்களில் குணமாகும்.டெங்கு உருவாகி நோய் தீவிரமாக பரவுகின்றது அது தொடர்பில் கவனமாக இருங்கள். மழையால் வயிற்றுப்போக்கு நோயும் ஏற்பட்டுள்ளது. இதை குறைக்க குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர், சுத்தமான உணவு வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். கைகளை சவற்காரமிட்டு நன்றாக கழுவுங்கள். பல நோய்கள் பரவுகின்றதை நாம் பார்க்கிறோம். அவற்றைக் குறைக்க நாம் செயற்பட வேண்டும்’ என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments