மன்னார் நகரசபை தவிஸாலர் தெரிவின் போது பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையிலான தன் கட்சியினரே தன்னை அமர்வுக்கு செல்லமுடியாத வகையில் தடுத்து வைத்ததாக மன்னார் நகரசபை உறுப்பினர் கொலின்றன் இன்றைய தினம் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி மன்னார் நகரசபைக்கான தலைவர் தெரிவின் போது மஸ்தான் தலைமையிலான தொழிலாளர் கட்சி சார்பாக போனஸ் ஆசனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் கொலின்றன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறான பின்னனியில் தன்னை சபை அமர்வுக்கு வரவிடாமல் தனது கட்சியின் தலைவரும் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் தடுத்து வைத்ததாகவும் அதன் காரணமாகவே தான் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் தலைவர் தெரிவின் போது தனது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்
இவ்வாறான நிலையில் குறித்த விடயத்தை கூட்டறிக்கையில் விடுமுறை என தெரிவித்த நிலையில் ஏனைய உறுப்பினர்களால் எதிர்பு வெளியிடப்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது அதன் பின்னர் குறித்த உறுப்பினரால் நகரசபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சபையில் வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில் தமது எதிர்பையும் கண்டனங்களையும் உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.