Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் ஒரு வாரத்தில் 4 பிரபல உணவகங்கள் மீது வழக்கு தாக்கல்!

மன்னாரில் ஒரு வாரத்தில் 4 பிரபல உணவகங்கள் மீது வழக்கு தாக்கல்!

மன்னார் நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள பிரபல உணவகங்கள் நான்கின் மீது மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகரினால் நீதி மன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரபகுதியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த நான்கு உணவகங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதி மன்ற நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

குறிப்பாக கையுறை பயன்படுத்தாமை, தலையுரை பயன்படுத்தாமை, சுகாதரமற்ற உணவு பொருட்களை கைவசம் வைத்திருந்தமை, உரிய அனுமதி பெறாமை, பழுதடைந்த உணவு பொருட்களை களஞ்சியப்படுத்தியிருந்தமை, சமையளரை சுத்தமாக பேணப்படாமை, கழிநீர் தொடர்பில் கவனம் செலுத்தாமை போன்ற குற்றச்சாட்டின் பெயரில் குறித்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் அண்மையில் மன்னாரில் பள்ளிமுனை வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உணவகம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு 71000 ரூபா அபராதமும் நீதி மன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய உணவகங்களுக்கு எதிரான வழக்குகள் நீதி மன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.

குறிப்பாக அண்மையில் மன்னார் நகரசபைக்கு என  பொது சுகாதர வைத்திய அதிகாரி ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில் உணவகங்கள் தொடர்பில் பல்வேறு சுகாதர நடைமுறைகள் கடினமாக கண்கானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments