எங்களை பொறுத்தவரை வடக்கு கிழக்கை இம்முறையும் தமிழர்கள் தான் ஆளப்போகின்றார்கள் JVP ஒருக்காலும் இங்கு ஆள வாய்ப்பில்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.
விடத்தல் தீவு தூய யோசேவாஸ் மத்திய மகாவித்தியாலயத்தில் தனது வாக்கை செலுத்திய பின்னர் ஊடகங்களிக்கு கருத்து தெரிவிக்கும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய பிரதேசங்களை நாங்கள் தான் ஆளவேண்டும் வடக்கு கிழக்கிலே பிரதேச சபை,நகரசபை,மாநகரசபை என அனைத்தையும் தமிழர்கள் கைப்பற்றுவார்கள் குறிப்பாக எங்கள் சங்கு சின்னம் ஆட்சியை நிரணயிகும் நிலையில் இருக்கும்.
தேசியத்தை நேசிக்கின்ற தமிழ் தரப்புக்களுடன் மாத்திரமே ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடை பெறும் அந்த வகையிலே வடக்கு கிழக்கிலே தமிழர்களின் ஆட்சிதான் நடக்கும் என்பதுடன் NPP யின் ஆட்சி ஒருபோதும் நடக்காது என்பதை தெட்ட தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.