மன்னார் மாவட்டத்தில் உள்ள அணைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில் அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசணங்களை பெற்று கொள்வோம் என்ற நம்பிகை உள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மன்னார் தாராபுரம் அல்மினா மகாவித்தியாலயத்தில் தனது வாக்கை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் இம்முறையும் சுமூகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம் பெற்று வருவதாகவும் அதே நேரம் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது அல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.