மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ‘விசுவாவசு’ சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜைகள் இன்று (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது.
அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.