Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீழ்நடுகை ஆரம்ப நிகழ்வு!

மன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீழ்நடுகை ஆரம்ப நிகழ்வு!

உலகளாவிய சூழலியல் வசதி (Global Environmental Facility) எனும் செயல்திட்டத்தின் கீழ், கடலோர கண்டல் தாவரங்களின் வளர்ச்சி ஊடாக சூழலை பாதுகாக்கும் முகமாக கண்டல் தாவரங்கள் நாட்டும் செயற்பாடு கிளிநொச்சி பூநகரி மற்றும் மன்னார் வேட்டையான் முறிப்பு சதுப்பு நிலப்பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

GEF/SGP/UNDP நிறுவனத்தின் நெறிப்படுத்தலின் கீழ் Ministry of Crab நிறுவனத்தின் நிதியுதவியுடன், மன்னார், அடம்பன் We Can மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக கண்டல் தாவர கன்றுகள், நேற்றைய தினம் (11/04/2025) மாலை வைபவரீதியாக நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் UNDP நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் டிலிஸா அவர்களும், Ministry of Crab நிறுவனத்தின் உத்தியோகஸ்தர் சமூகம் திரு. சுமுகன் சர்மா தலைமியிலான குழுவினர் மற்றும் UNDP இன் மன்னார் மாவட்ட கள இணைப்பாளர் திருமதி ஜெயவதனி மற்றும் அறிவு முகாமைத்துவம் பகுதி திட்ட இயக்குனர் தர்மலிங்கம் கணேஸ், உட்பட We Can அமைப்பின் பிரதிநிதிகள் கீலியன் குடியிருப்பு மற்றும் வேட்டையான் முறிப்பு மீனவ அமைப்பு பிரதிநிதிகள், வனவளதிணைகள் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

குறித்த செயற்திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்ட கரையோரப் பகுதிகளில் சுமார் 7500 கண்டல் தாவரங்கள் நடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments