மன்னார் சித்தி விநாயகர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் இடம் பெறும் SPL மென்பந்து கிறிக்கட் சுற்று போட்டியின் 7வது சீசன் சுற்றுபோட்டியானது நேற்றையதினம் திங்கட்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
12 அணிகளை கொண்ட குறித்த மென்பந்து கிறிக்கட் சுற்று போட்டியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் முதலாவது போட்டியானது சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் தலைவர் பஞ்சனாதன் கரன் தலைமையில் சித்திவிநாயகர் பாடசலை மைதானத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த பாடசாலை அணிகள் 2 குழுக்களாக கலந்து கொள்வதுடன் 7 ஓவர்களை கொண்ட லீக் போட்டியாக பாடசாலை நிறைவடைந்த பின்னர் இடம் பெறவுள்ளது