மன்னார் கொமர்சியல் வங்கியின் நிதி அனுசரணையில் மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் கல்வி முன்னேற்றத்துக்கு என நவீன வசதிகள் கொண்ட கணணி ஆய்வு கூடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கொமொர்சியல் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டும் கல்வி செயற்பாடுகளின் அடிப்படையில் முன்னேறிவரும் பாடசாலைகளில் ஒன்றான மன்னார் கருங்கண்டல் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட கணனி ஆய்வுகூட திறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலையின் புதிய கணனி ஆய்வு மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் கொமொர்சியல் வங்கியின் மாகாண முகாமையாளர் ஜெயபாலன்.
மன்னார் கொமர்சியல் வங்கி கிளையின் முகாமையாளர் டொமினிக் அலன் கலந்து கொண்டதுடன் ஆய்வு கூடத்தையும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளித்தனர்.