மன்னார் மாவட்டத்தின் அடம்பன் கன்னாட்டி கிராமத்தில் வசித்து வரும் விசேட தேவையுடைய திறமை மிக்க மாணவியான பிறைசனா குடும்பத்தினருக்கு முதல் கட்ட வாழ்வாதார உதவி திட்டத்திற்கான நிதி உதவி இன்றைய தினம் புதன் கிழமை வன்னிமண் அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவி விசேட தேவையுடைய மாணவியாக காணப்படுகின்ற போதும் பல்வேறு சிரமங்கள் மத்தியில் பெற்றோரின் உதவியுடன் மன்/ஆண்டாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.
பல நல்லுல்லங்கள் குறித்த சிறுமிக்கு உதவி வருகின்ற போதிலும் சிறுமியின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.
இந்த நிலையில் வன்னி மண் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் பிரபாவின் தலைமையில் குறித்த சிறுமியில் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு என ஒரு தொகை பணம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் குறித்த சிறுமியின் கல்வி நடவடிக்கையை இலகுபடுத்தவும் கல்லூரி செயற்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் குறித்த நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.