கொழும்பு லோட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) அறிவித்துள்ளார்.
இந்த ஆசிரியர் போராட்டத்தினால் நாட்டில் இன்றையதினம் மொத்தமாக 10,026 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையதினமும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.