Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsதிடீர் என அகற்றப்பட்ட மன்னார் பிரதான சோதனை சாவடி!

திடீர் என அகற்றப்பட்ட மன்னார் பிரதான சோதனை சாவடி!

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

பலவருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன்,சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர்.

 இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் இடம் பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சோதனை சாவடியை அகற்றி தருமாறு நேரடி கோரிக்கை முன்வைக்கப்ப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் குறித்த பாலப்பகுதியில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன்  சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் இராணுவம் தொடர்சியாக நிலை கொண்டுள்ளதுடன் இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments