Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. காற்றாலை மின் உற்பத்தி மற்றும்   கனிய மண் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அரசியல் நலன் சார்ந்தே குறித்த விஜயம் அமைந்துள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(20) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் விவகாரத்திற்காக மன்னாரிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

காற்றாலை உற்பத்தியை இந்தியாவிற்கு வழங்குகின்ற விவகாரம் தொடர்பாகவும் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான தரை வழி பாதை  அமைப்பது சம்மந்தமாகவும் உரையாடிச் சென்றுள்ளார்.

அவருடைய வருகை அரசியல் ரீதியாக நிறைவேறி இருந்தாலும் மன்னார் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

இங்குள்ள காணி விடுவிப்பு குறித்து எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்விடயத்தை வலிமையாக வலியுறுத்தவும் இல்லை.அவர்களும் ஆளும் கட்சி போல் ஜனாதிபதியின் நிகழ்வில் ஆசுவாசமாக கலந்து கொண்டு சென்றுள்ளனர்.

மன்னாரில் இனி புதிதாக  குடியேறுவதற்கு எவ்வித காணியும் இல்லை.

வன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காடுகளை பாதுகாத்தல் ,விலங்குகளை பாதுகாத்தல், கரையோரத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சகல இடங்களையும் வர்த்த மணிக்கு உட்படுத்தப்பட்டு, மன்னாரில் மக்கள் குடியேறாத வகையில் ஒரு துண்டு நிலம் இல்லாத நிலையில் உத்தரவாதத்தை அரசு மீறி விட்டது.என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments