Wednesday, October 15, 2025
No menu items!
HomeSri Lanka Newsஇரணைமடு நீர்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது!

இரணைமடு நீர்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது!

இரணைமடு நீர்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில்  05.06.2024 அன்று இடம்பெற்றது.

                                                                     மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 16.02.2024 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக இன்றையதினம் ஒழுங்குசெய்யப்பட்டது.

இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான யாழ்மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கான நடவடிக்கைககளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் மேற்படி தெளிவுப்படுத்தினார்.

குறிப்பாக இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான இறுதிபடுத்தப்பட்ட புதிய நவீன ஆய்வுகளுக்கு அமைவாக சிவில் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, UN நீர் முகாமைத்துவம், யாழ் பல்கலைக்கழகம், நீர்ப்பாச தினைக்களம், UN உணவு மற்றும் விவசாய அமைப்புக்கள் ஆகிய அமைப்புக்களின் தீர்மானமிக்க ஆய்வு அறிக்கையினை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலி யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சிரிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்லிங்கம் சித்தார்த்தன் அமைச்சின், செயலாளர் நபீல், நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பின் தலைவர், பொதுமுகாமையாளர் அரச அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments