இலங்கையின் 16 மாவட்டங்களை சார்ந்த 100 தமிழ் கலைஞர்களை உள்ளடக்கி “ரணதீரா” என்னும் முழுநீள திரைபடம் உருவாகி உள்ளது.
இத்திரைப்படத்தில் மன்னார் மாவட்டத்தில் வளர்ந்து வரும் கலைஞர்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் மன்னார் மாவட்டத்தின் வளர்ந்து வரும் இசைக் கலைஞன் பிரதீப் SP1 இசையில் இத் திரைபடம் அமைய பெற்றுள்ளது
இத்திரைப்படமானது சில்லையூர் றெஜியின் இயக்கத்திலும், கிலோஷன் இன் ஒளிப்பதிவிலும், டக்சனின் ஒளித்தொகுப்பிலும் வெளிவர இருக்கிறது.
இந்த திரைபடத்தின் 2nd poster இன்றைய தினம் மதியம் Hefty Entertainment Media வின் உத்தியோகபூர்வ Youtube தளத்தில் வெளியிடப்படஉள்ளது. இத் திரைப்படத்தின் டீசர் யூன் மாதம் 02 திகதி யாழ் செல்வா திரையரங்கில் காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.