மன்னார் மாவட்டத்தில் முதல் பெண்மணியாக திடீர் மரண விசாரனை அதிகாரியாக திருமதி ஜூடிற் ஷியாமினி தயாளராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
2024.05.13 ஆம் திகதி திங்கள் கிழமை கொழும்பில் நீதி அமைச்சு காரியாலயத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
நீண்ட காலமாக மன்னார் நகர் தீவுப் பகுதிக்குள் திடீர் மரண விசாரனை அதிகாரி இல்லாத குறை இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் பெரியகமத்தைச் சேர்ந்தவரும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர்கல்வி வரை கற்ற பழைய மாணவியும் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலம் சமூக விஞ்ஞான பிரிவில் இளமானிப் பட்டம்பெற்ற முதல் பெண்மணியும் மன்னாரில் திடீர் மரண விசாரானை முதல் பெண்மணி அதிகாரியும் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த ஆறுவருடங்களாக நீதி அமைச்சின் கீழ் இயங்கி வரும் மத்தியஸ்த சபை மத்தியஸ்தராகவும் இவர் பணியாற்றி வருவதும் மேலும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)