பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற தேசிய ரீதியான “மைலோ” கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 10 வயதிற்குட்பட்ட அணியினர் champions ஆகவும் 12 வயதிற்குட்ட அணியினர் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்
வருடா வருடம் இடம் பெறும் குறித்த சுற்றுப்போட்டியில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அணிகள் தேசிய ரீதியில் இடம் பெறும் போட்டியில் கலந்து கொள்ளும் அவ்வாறு நேற்றைய தினம் இடம் பெற்ற போட்டியிலேயே மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி champion மற்றும் மூன்றாம் இடத்தை தனதாக்கி கொண்டுள்ளது
2011 ஆண்டு வரையில் 11 தடவைகள் national champion கிண்ணங்களை தமதாக்கியுள்ள புனித சவேரியார் பாடசாலை அதன் பிறகும் பல தடவைகள் இரண்டாம் மூன்றாம் இடங்களை தேசிய மட்டத்தில் பெற்றிருந்தாலும் 13 வருடங்களின் பின் தேசிய மட்ட champion கிண்ணத்தை தனதாக்கி பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது
நேற்றைய தினம் இடம் பெற்ற சுற்றுப்போட்டிகளில் விளையாடிய அனைத்து அணிகளிலும் அதிக பட்சமாக மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் under10 அணியினரே 9 கோல்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் எதிரணியால் எந்த ஒரு கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதே நேரம் குறித்த சுற்றுப்போட்டியில் மன்/ தோட்டவெளி GTMS ஆண்கள் 12 வயது பிரிவில் இரண்டாம் இடத்தையும் 10 வயது பெண்கள் பிரிவில் மன்னார் வட்டக்கண்டல் GTMS பாடசாலை அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.