Wednesday, October 15, 2025
No menu items!
HomeSri Lanka Newsவாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! வெளியான அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! வெளியான அறிவிப்பு!

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு கையிருப்புக்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு கையிருப்பு பேணப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments