Thursday, October 16, 2025
No menu items!
HomeSri Lanka Newsஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு!

ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு!

நாட்டிலுள்ள தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே, சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை.

இந்தநிலையில், அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதேவேளை கடந்த வாரத்தில் அதற்கு நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியதுடன், நேற்றைய தினம் அதனை உறுதிப்படுத்தியது.

இதற்கமைய, அடுத்த மாதம் முதல் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு 8 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments