மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸ் சிவில் சீருடைக்கு ஒத்த சீருடையுடன் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம் பெற்றுள்ள நிலையில் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாகவே மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் இரு நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டி இறந்த நபர்களுடன் சம்மந்தப்பட்ட நபர் மீதே இன்றைய தினம் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் பொது மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈட்பட்டு வருகின்றனர் அதே நேரம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.