Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஉள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இது வரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளருமான என்.எம். ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை(18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அதாவது யுத்தத்திற்கு முன்பும் சரி தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

எனினும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த ஏன் அரசாங்கம் தவற விடுகின்றது என்ற கேள்வி மன்னார் மாவட்ட மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கண்துடைப்புக்காக பாதிக்கப்பட்ட எமது மீனவர்கள் முறைப்பாட்டை வைக்கின்ற போது ஒரு சில படகுகளை கைது செய்கின்றனர்.எனினும் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும்,ஏனைய செயற்பாடுகளினால் வட பகுதி மீனவர்கள் தொழில் இழப்பை சந்திப்பதோடு,மீன்பிடி உடமைகளையும் இழந்து வருகின்றனர்.இலங்கை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

குறுகிய எல்லைப் பரப்பை பாதுகாக்க முடியாமல் இருக்கின்ற இந்த அரசாங்கம் வெறுமனே எங்களுக்கு அப்பால் இருக்கின்ற கடல் பிரதேசத்தையும் கடல் வணிக நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்மந்தமே இல்லாத நாடுகளுக்கு திட்டங்களையும் நிதியுதவிகளையும் வழங்க வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

ஆனால் அழிக்கப்பட்ட வடமாகாணம் எவ்வித நிதி வசதியும் இல்லாமல் அங்குள்ள பாடசாலைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் எவ்வித தொழில் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலையில் சம்மந்தமே இல்லாத நாடுகளுக்கு உதவிகளை மேற் கொள்ள ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற் கொள்ளுவதை ஒரு வகையில் நாங்கள் பாராட்டினாலும்,எமது பிரச்சினைகளை தீர்த்து வைத்ததன் பின்னர் அதனை அவர் முன்னெடுக்க வேண்டும்.

இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இது வரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், உள்நாட்டு மீனவர்களையும், உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments