Saturday, May 4, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக் கடமையாற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் இன்றையதினம் புதன் கிழமை மதியமளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சம்பள உயர்வு,மேலதிக நேர கொடுப்பனவு,பதில் கடமை,காகிதாகி செலவுகள் உள்ளடங்களாக பல்வேறு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் பல வருடங்களாக நீடித்து வரும் இழுபறி நிலையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான மாதந்த கொடுப்பனவை அரச சுற்றறிக்கைக்கு அமைவாக7500 அதிகரித்து வழங்கு,பதில் கடமைக்கான கொடுப்பனவை வழங்கு இல்லா விட்டால் பதில் கடமையை நிறுத்து,வெளிக்கள கொடுப்பணவை 300 இல் இருந்து 3000 ரூபாவக அதிகரி,காகிதாகி கொடுப்பனவை பெற்று தாருங்கள்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு சம்மந்தமற்ற வேலைகளை திணிக்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

11 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments