Saturday, May 4, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS Newsகல்வி அமைச்சுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்!

கல்வி அமைச்சுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்!

பாடசாலையில் இணைக்கப்பட்டு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளஅபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவைக்குள் உள்ளெடுக்கக் கோரி கல்வியமைச்சருக்கு எதிராக கல்வியமைச்சின் முன் போராட்டம் நேற்றய தினம் (23.04.2024) இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடளாவிய ரீதியில் பெரும்திரளான சிங்கள,தமிழ்,முஸ்லீம் பாடசாலையில் இணைக்கப்பட்ட கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள்கலந்து கொண்டிருந்தனர்.
கல்வி அமைச்சருக்கு எதிரான கோஷங்கள் அங்கு எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டம் பல மணி நேரமாக இடம்பெற்றிருந்தது. அதன் பிற்பாடு கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியவர்களோடு கலந்துரையாடல் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் பாடசாலையில் இணைக்கப்பட்டு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்த விடயம் பாடசாலையில் மூன்றரை வருடங்களுக்கு மேலாக இணைக்கப்பட்டு கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பரீட்சை இன்றி ஆசிரியசேவைக்குள் உள்வாங்கவேண்டும்.
என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.

அதன்படி இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள் பாடசாலையில் இணைக்கப்பட்டு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான விசேட அமைச்சரவை அனுமதியினைப்பெற்று அனைவரையும் உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

அதன்பிற்பாடு அவ்வாறு உள்வாங்குவதென்றால் உயர்நீதி மன்றில் இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கினை மீளப்பெற வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதற்கு பாடசாலையில் இணைக்கப்பட்டு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளஅபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதிலாக வழக்கினை மீளப்பெறுவதென்றால் எமது சட்டத்தரணிகளோடு நீதிபதிகளை சந்தித்து பாடசாலையில் இணைக்கப்பட்டு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளஅபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாங்கள் பாடசாலைக்குள் பரீட்சையின்றி உள்வாங்குகின்றோம் என அவர்களுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் . அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிப்போம் என கூறியிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments