இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(25) மாலை 4.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இன்று வியாழக்கிழமை (25) மாலை மன்னார் நகர வந்தடைந்த இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் எழத்தூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கு மோட்டார் சைக்கிள் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன்,பா.அரியநேந்திரன்,சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட முக்கியஸ்தர்கள்,இளைஞர் அணியினர் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.