Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஎருக்கலம்பிட்டி பகுதியில் பல லட்சம் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது!

எருக்கலம்பிட்டி பகுதியில் பல லட்சம் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது!

மன்னார் கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்பிலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதியளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை(16) மதியம் அளவில் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபால அவர்களின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் நெறிப்படுத்தலில் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மனல தலைமையினான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது எருக்கலம் பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான சங்குகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததுடன் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குளை உடமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த களஞ்சிய சாலையில் 20000 சங்குகளே களஞ்சியப்பட்டுத்த அனுமதி காணப்பட்ட நிலையில் 30000 மேற்பட்ட அளவிலான சங்குகளும் வளர்சி நிலை அடையாத சங்குகளையும் களஞ்சியப்படுத்தியதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் உட்பட பணியாளர்கள் இருவர் உள்ளடங்களாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த களஞ்சிய சாலையில் இருந்து 14143 சங்குகள், 16 கிலோ கிராம் காய்ந்த அட்டைகள்,700 உயிர் அட்டைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சான்று பொருட்களை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சொன்றுள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் சங்கு,அட்டைகள் உட்பட சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments