மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகளையும், குறிக்கோள்களையும் நிறைவேற்றுவற்கு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை விணைத்திறனுடனும், பயனுறுதி வாய்ந்ததாக, உறுதியான எண்ணத்துடன், அதிகபட்ச அர்பணிப்புடன், நேர்மையாக, மக்கள் சார்பாக நிறைவேற்றுவதாக மன்னார் நகரசபை ஊழியர்கள் இன்றையதினம் சத்திய பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் கடமைகள் மற்றும் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னார் நகரசபையில் இடம் பெற்றது.
குறித்த கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வில் மன்னார் நகரசபையின் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் இணைந்து “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை” என்ற அடிப்படையில் புதிய ஆண்டில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மையப்படுத்தி மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கு விணைத்திறன் மிக்க பணிகளை மேற்கொள்வோம் என்ற அடிப்படையில் சத்தியபிரமானத்தை மேற்கொண்டுள்ளனர்.