மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இயந்திர தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க கண்காட்சி பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு FSC தலைமையில் இன்றையதினம் (07) வியாழக்கிழமை பாடசாலை பொது ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள் தேடிகற்று அதன் ஊடாக கல்வியை விருத்தி செய்யும் முகமாகவும் அதன் ஊடாக மாணவர்களின் எதிர்காலத்தை விருத்தி செய்யவேண்டும் என்ற நோக்குடனும் குறித்த கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த கண்காட்சியை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபரும் டிலாசால் அருட்சகோதரர்களுக்கான வடமாகாண இணைப்பாளருமான அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் FSC அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் வலய உதவி கல்வி பணிப்பாளர் (கணிதம்) நவனீதன் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப ஆசிரிய ஆலோசகர் ஞானசீலன் அக்கடமி இணைப்பாளர் மோகன் குரூஸ் ஓய்வு பெற்ற வலய கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியான் சட்டத்தரணி மடுத்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கண்காட்சியில் 6-12 வரையான மாணவர்கள் உருவாக்கிய, கண்டுபிடித்த 100 மேற்பட்ட கருவிகள், மற்றும் புத்தாக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பாக அபிஷான் எனும் மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட மாகாண ரீதியாக முதலிடம் பெற்ற Smart Bed எனும் கருவி பலராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.