Wednesday, October 15, 2025
No menu items!
HomeBusinessகுளோபல் பினான்ஸின் 'இலங்கையின் தலைசிறந்த வங்கி' என்ற விருதை 21வது தடவையாக வென்றுள்ள கொமர்ஷல் வங்கி

குளோபல் பினான்ஸின் ‘இலங்கையின் தலைசிறந்த வங்கி’ என்ற விருதை 21வது தடவையாக வென்றுள்ள கொமர்ஷல் வங்கி

அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் குளோபல் பினான்ஸ் சஞ்சிகையின் 2023ம் ஆண்டுக்கான இலங்கையின் தலைசிறந்த வங்கிக்கான விருதை கொமர்ஷல் வங்கி அண்மையில் பெற்றுக் கொண்டது.

மொரோக்கோவின் மராகேச் நகரில் உள்ள மேய்டின் தியேட்டரில் இடம்பெற்ற மேற்படி சஞ்சிகையின் 30வது வருடாந்த விருது நிகழ்விலேயே கொமர்ஷல் வங்கி இந்த விருதைப் பெற்றுக் கொண்டது. இந்த கீர்த்தி மிக்க விருதை கொமர்ஷல் வங்கி வென்றுள்ளமை இது 21வது தடவையாகும். குளோபல் பினான்ஸ் சஞ்சிகையின் கருத்தின் படி கஷ்டமான சந்தை நிலவரங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகக் கவனமாக அனுகிய வங்கிகள் மற்றும் எதிர்கால வெற்றிகளுக்கு அடித்தளங்களை இடும் அதேவேளை உறுதியான பெறுபேறுகளையும் பெற்றுக் கொண்ட வங்கிகளே வெற்றிகளை அடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் மிக்க வங்கிகளைத் தெரிவு செய்யும் போது குளோபல் பினான்ஸ் அளவு குறிக்கோளில் இருந்து தகவல் மட்ட அகநிலை காரணிகள் வரைக்கும் கவனம் செலுத்தி உள்ளது. குறிக்கோள் அடிப்படையிலான அளவு கோலானது சொத்துக்களின் வளர்ச்சி இலாபத்தன்மை புவியியல் அணுகல் மூலோபாய உறவுகள் புதிய வர்த்தக அபிவிருத்தி உற்பத்திகளில் புதிய கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.

அகநிலை அளவுகோல்கள் பங்கு மதிப்பீட்டாளர்களின் கருத்துக்கள்ரூபவ் வரவு தரப்படுத்தல் மதிப்பீடு வங்கியியல் ஆலோசகர்கள் மற்றும் தொழில்துறையோடு தொடர்புடைய ஏனையவர்களை உள்ளடக்கியதாகும். குளோபல் பினான்ஸின் ஆசிரியர்களால் கூட்டாண்மை நிதித்துறை நிர்வாகிகள் வங்கியிலாளர்கள் வங்கித்துறை ஆலோசகர்கள் உலகம் முழுவதும் உள்ள மதிப்பீட்டாளர்கள் ஆகியோருடன் தீவிரமான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்பே விருதுக்கு உரியவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க ஆகியோர் வங்கியின் சார்பாக விருதை பெற்றுக் கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments