Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsகலாசார உத்தியோகத்தர் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார் திரு.இ.நித்தியானந்தன்!

கலாசார உத்தியோகத்தர் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார் திரு.இ.நித்தியானந்தன்!

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக கலாசார உத்தியோகஸ்தாராக பல்வேறு சேவைகளை மேற்கொண்டுவந்த  இ.நித்தியானந்தன் கலாசார உத்தியோகத்தர் தரம் 1 இலிருந்து விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டு கலாசார உத்தியோகத்தராக நியமனம் பெற்ற திரு. நித்தியானந்தன் நெடுந்தீவு பிரதேச செயலகம், ஊர்காவற்துறை பிரதேச செயலகம், காரைநகர் பிரதேச செயலகம், வவுனியா பிரதேச செயலகம், மடு பிரதேச செயலகம் ஆகியவற்றில் கலாசார உத்தியோகத்தராகவும் பணியாற்றியிருந்தார்.

கடந்த 2009 ஆண்டு முதல் மாவட்ட கலாசார உத்தியோகத்தராக வவுனியா மாவட்ட செயலகத்திலும் 2018 ஆண்டு முதல் மன்னார் மாவட்ட செயலகத்திலுமாக சுமார் 16 வருடங்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தராக பதில் கடமை ஆற்றியிருந்த நிலையில் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைமாமணிப் பட்டதாரியான இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பண்பாட்டியலில் முதுகலைமாணிப் பட்டத்தையும் அதே நேரம், அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தினால் வழங்கப்படும் இளஞ் சைவப் புலவர், சைவப்புலவர் பட்டங்களையும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரால் வழங்கப்படும் சித்தாந்த பாலபண்டிதர்  ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார் இவர் கடமை புரிந்த இடங்களில் கலாச்சார நிகழ்வுகளை தொகுத்து மேடையேற்றுவதில் கைதேர்ந்தவராக காணப்பட்டார்.

இவர் மீண்டும் 21.04.2025 திங்கள் கிழமை முதல் மன்னார் மாவட்ட செயலகத்தில் சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தராக கடமையை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments