Saturday, October 18, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsவடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் !

வடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் !

வடமாகாணத்தின் இளைஞர்கள் மத்தியில் கலை துறை சார்ந்த ஈர்ப்பு அதிகரித்து வருகின்றது குறிப்பாக அண்மை காலங்களாக ஓவியம், சிற்பம் போன்ற துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு,படைப்புக்களும் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான பின்னனியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யாழ்பல்கலை கழக மாணவன் கமல ரூபன் உருவாக்கியுள்ள கலைப்படைப்புக்கள், அவருடைய கலைத்துறைசார்ந்த செயற்பாடுகளும் பலரையும் கவர்ந்துள்ளது.

ஒரு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்படைப்புக்களை தனது பல்கலைகழக கல்வி செயற்பாடுளின் போது அதே நேரம் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மாத்திரம் உருவாக்கி மெய்சிலிர்க வைத்துள்ளார் கமல ரூபன்.

கிளிநொச்சியில் மிகவும் சாதரண பிண்னனியை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் கமல ரூபன் அவரின் இரு அண்ணன்கள் இலங்கையில் இடம் பெற்ற யுத்ததினால் வலிந்து காணமல் ஆக்கப்பட்டனர் தந்தை ஒரு தச்சு தொழிலாளி இவ்வாறான ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் கல்வியில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ்பல்கலை கழகம் சென்றார் கமரூபன்.

 பல்கலைகழகத்தில் பல பாடத்தேர்வுகள் இருந்த போதிலும் தந்தை ஒரு தச்சு தொழிளாலியாக இருந்தமையினால் சிறுவயதில் இருந்தே மரசெதுக்கல் வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம் காணப்பட்டமையினால் கமல ரூபன் கலைதுறையில் பல பாடங்கள் இருந்த போது இந்த பாடத்தை தெரிவு செய்து தனது அடையாளத்தை மெல்ல மெல்ல உருவாக்கி வருகின்றார்.

கமல ரூபனின் கலை படைப்புக்கள் ஆழமான கருத்துக்களை நேர்த்தியாக இலகுவாக வெளிப்படுத்த கூடியதாக காணப்படுகின்றது.

அதே நேரம் கலை துறையில் பாரம்பரியமாக பின்பற்றுகின்ற செயற்பாடுகளுன் மட்டும் நின்று விடாது புதிய தொழில் நுட்பங்களையும் தனது படைப்புக்களில் உட்புகுத்தி அதிலும் வெற்றி கண்டுள்ளார்.

கமல ரூபனினால் வரையப்பட்ட சில ஒவியங்கள் செதுக்கப்பட்ட சிலைகள் தத்துரூபனாதாக காணப்படுவதுடன் பிரதி இட கூடிய நபரை கண் முன் நிறுத்தாக்கூடியதாகவும் காண்ப்படுகின்றது.

இவ்வாறு பல திறமைகளை கொண்ட கமல ரூபன் வடமாகாணத்தில் உள்ள கலைப்படப்பாளர்களுக்கு ஒரு குறியீடாகவும் கலைத்துறை மீதான ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்  ஒரு ஊடகமாக இருக்கின்றார்.

தற்போது சிறிய அளவிலான தொழில் முயற்சி ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்திருக்கும் கமலரூபன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தனது கலைப்படைப்புக்களை உள்ளூரிலும் வெளிநாடுகளுக்கும் சந்தைபடுத்தி வருகின்றார்.

கலைதுறை சார்ந்த படைப்புக்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் என்பது எமது நாட்டில் குறைவாகவே காணப்படுகின்றது பலரது கலைப்படைப்புக்கள் தற்போது வீதிகளிலே காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான பின்னனியில் கலைத்துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கான நவீன சந்தைபடுத்தல் மற்றும் ஊக்கப்படுத்தல் செயற்பாடுகளை அரசாங்கம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் கமலரூபன் போன்ற பல இளைஞர்கள் கலைதுறையில் சாதிப்பதற்கான பயணங்களில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் பயணிப்பார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments