மன்னார் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான உயர்தர உணவகமான “KING LOBSTER” கிங் லோப்ஸ்ரர் உணவகமானது நேற்றைய தினம் மாலை 7 மணியளவில் வைபவ ரீதியாக அதன் நிறுவனர் நாக ரூபன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தீபன் ENTERPRISES GROUP COMPANY இன் முதலீட்டில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் மன்னார் பொது விளையாட்டு அரங்கிற்கு அண்மையில் குறித்த உணவகமானது அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பொது மக்கள் இந்திய மற்றும் சீன உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் முழுவதும் குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளை கொண்டு குறித்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவக ஆரம்ப நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொது செயலாளர், வர்த்தகர்கள், நிறுவன தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.