சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) வியாழக்கிழமை மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னால் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்றது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர் பெனடிற் ரொலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வசந்த் மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் இணைந்து நினைவு சுடரை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள், வர்த்தகர்கள், பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.