மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவுகள் இளம் அரசியல் செயற்பாட்டாளர் பிரசாந்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் நகர் பகுதியில் உள்ள எழுத்தூர், சாந்திபுரம், தாழ்வுபாடு, கீரி, தோட்டவெளி, தோட்டக்காடு, தரவான்கோட்டை உள்ளடங்களாக பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அதே நேரம் அவர்களின் தேவைகளின் அடிப்படையில் சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் பிரசாந்த தலைமையிலான குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
மன்னாரில் பொது அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பலர் இணைந்து வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.