மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 2100 நபர்கள் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களையும் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதே நேரம் பல நல்உள்ளங்கள் தாமக முன்வந்து நலன்புரி முகாம்கள் மற்றும் வீடுகளில் – சமைத்த உணவு , உலர் உணவு பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மா மற்றும் தேவை அறிந்து நுளம்பு வலைகளையும் வழங்கி வருகிறார்.