Sunday, October 19, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்!

விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த கிராமத்தில் 108 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குறித்த கிராமத்திற்குச் செல்லும் பாதைக்கு அமைக்க நீர் வெளியேறிச் செல்லும் மதகை (போக்) அவ்விடத்தில் கொண்டு வரப்பட்டு 4 வருடங்களாகிய நிலையில் அவற்றை உரிய முறையில் செப்பனிடவில்லை.

குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தால் வெள்ள நீர் தமது கிராமத்தில் தேங்காது எனவும்,குறித்த நடவடிக்கையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் வெள்ள நீரை தமது கிராமத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

எனினும் தலை மன்னார் பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

குறித்த பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் மக்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.அதனை தொடர்ந்து அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments