Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஊழல்வாதி சத்திய லிங்கத்திற்கு தேசிய பட்டியல் மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு!

ஊழல்வாதி சத்திய லிங்கத்திற்கு தேசிய பட்டியல் மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு!

இலங்கை தமிழரசு கட்சிக்கு கிடைக்க பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிறைந்த வெறும் 4033  வாக்குகளை பெற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சுமந்திரனின் பின்புலத்திலே சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவதற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மக்கள் எதிர்பார்த்த  இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காது முன்னதாகவே மாகாண சபை ஆட்சி காலத்தில் சுகாதார துறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதற்காக அமைச்சு பதவியை இழந்த சத்திய லிங்கத்திற்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

குறிப்பாக சத்திய லிங்கம் இம்முறை தேர்தலில் வெறுமனே 4033 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார் அவரை விட மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட இளம் சட்டத்தரணியான செல்வராஜ் டினேஸன் தனது முதலாவது தேர்தலிலே 6518 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஆனாலும் தகுதி வாய்ந்த அவருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்காது ஊழல் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை சேர்த்தும் பல கோடிகள் செலவு செய்து தனது பிள்ளைகளை ரஸ்யாவில் மருத்துவ கற்கைக்காக அனுப்பி வைத்துள்ள சத்திய லிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்க தீர்மானித்துள்ளமை  தொடர்பில் விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசு கட்சிக்கு வன்னியில் வாக்குகள் குறைந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலில் மொத்தமாக வாக்குகளை இல்லாமல் ஆக்குவதற்கே சத்தியலிங்கம் போன்ற ஊழல் வாதிகளுக்கு சுமந்திரனின் ஊதவியுடன் தேசிய பட்டியல் வழங்குப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் வழங்கும் செயற்பாட்டுக்கு  தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மாத்திரம் இல்லாமல் சமூக செயற்பாட்டார்கள்,அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர்  எதிராக தொடர்சியாக சமூக வலைதலங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments