Monday, October 20, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsவடக்கு கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்!

வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்!

வடக்கு கிழக்கில் உள்ள  இளைஞர்,யுவதிகள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறதோடு, இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி வகைகளையும்   கையாள வேண்டும் என்கிற விடையத்தையும்  அவர்கள் எதிர்பார்த்துள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (22) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இதனுடாக மக்களின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொண்டுள்ளோம்.

இளைஞர் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறது. மேலும் இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி வகைகளையும் நாங்கள் கையாள வேண்டும் என்கிற விடையத்தையும் எதிர் பார்க்கின்றனர்.

குறித்த இரு விடயங்களையும் ஒரே திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

திறமையுள்ளவர்கள் தெரிவு செய்யப்படாமல், அரசியல் ரீதியான செயல் பாடுகளில் தங்களுடன் நிற் கின்றவர்களுக்கு சில அமைச்சர்களைக் கொண்ட கட்சிகள் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

குறித்த விடையத்தில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊழல் அற்ற அரசாங்கம் என கூறப் படுகின்ற தற்போதைய ஜனாதிபதியின் கூற்று எல்லாம் அனைத்து அபிவிருத்தி ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இளைஞர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த இரு விடயங்களையும ஒரே திசையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாங்கள் அபிவிருத்தியோடும்,இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான வழி வகைகள் குறித்தும் நாங்கள் சொல்லியாக வேண்டும் என்கின்ற நிலை இருக்கின்றது.

இளைஞர்களின் கோரிக்கைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளை தேடிச் சென்றவர்களின் தொகை அதிகரித் துள்ளதான் காரணமாகவே குறித்த ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பார்க்கின்ற போது இளைஞர்களின் ஆர்வம் உள்நாட்டிலே வேலைவாய்ப்புக்கள், தொழிற்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக அவர்களின் சிந்தனைகள் செயல்பட ஆரம்பித்துள்ளது.எனவே இளைஞர்,யுவதிகளின் உடைய சிந்தனைகளை ஒரு பெறுமதியாக ஏற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments