Monday, October 20, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsதலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர்சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை இட மாற்றக் கோரி மக்கள்...

தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர்சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை இட மாற்றக் கோரி மக்கள் போராட்டம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை(30) காலை 9 மணி முதல் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட குறித்த மதுபானசாலைக்கு முன் இடம் பெற்றது.

குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், காமன்ஸ், உற்பட பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மாதம் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெமுத்ததோடு,குறித்த மதுபான சாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கை அளித்ததாகவும், தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்றைய தினம் திங்கட்கிழமை(30) குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார். எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது மக்கள் தமது பிரச்சினைகளை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபரின் உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாக வே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குறிப்பாக தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடையத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அரச அதிபரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments