மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாலை 3 மணி வரை 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இது மொத்த வாக்குகளில் 65.92 வீதமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வன்னி தேர்தல் தொகுதியில் ஏனைய மாவட்டங்களான வவுனிய மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை விட மன்னார் மாவட்டத்தில் தற்போதைய நிலவரத்தின் படி அதிகளவு வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது