ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17) மதியம் மன்னார் பஜார் பகுதியில் பெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான்,சுரேன் ராகவன்,பாராளுமன்ற உறுப்பினர்களான கே.திலீபன், முஷராப்,முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு,சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.