Monday, October 20, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsநாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.-மன்னாரில் இராஜாங்க அமைச்சர்...

நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.-மன்னாரில் இராஜாங்க அமைச்சர்   கே. காதர் மஸ்தான்!

நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை அனைவரும்  ஆதரிக்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) மதியம் மன்னார் பஜார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவு கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) மன்னார்  பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டேன்.

Paid Advertisement

மன்னார் நகரத்தை பொறுத்தமட்டில் வியாபாரிகளும், மக்களும் ,கல்வியாளர்களும் மிகவும் தொழிவாகவே இருக்கின்றார்கள்.தற்போதைய நிலையில் இருந்து சற்று இந்த நாடு முன்னேறி பொருளாதாரம் மேம்பட வேண்டுமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மக்களும் வர்த்தகர்களும் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்.

அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.மக்கள் உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றனர். மக்களின் அமோக வரவேற்பு எங்களுக்கு கிடைக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்.

Paid Advertisement

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் வெற்றி அறிவிப்பின் போது அதிகூடிய வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்படுவார் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆதரவு மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சின்னமான கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments