Monday, October 20, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னார் மாவட்டத்திற்கு இரண்டு இளையோர் ஆளுமை விருது!

மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு இளையோர் ஆளுமை விருது!

சிறந்த சமூக செயல்பாடு மற்றும் கலை ஆர்வம் போன்றவற்றில் தொடர்ச்சியாக செலாற்றி வந்தமைக்காக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கு   விருதுகள் கிடைத்துள்ளன.

வவுனியா மாவட்ட அறிவியல் மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் துறைசார் இளைய மூத்த ஆளுமைக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (28) வவுனியா சுத்தானந்தா கலை கலாசார அரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாடு முழுவதும்  உள்ள  தமிழ் கலைஞர்கள் ,சமூக ஆர்வலர்களுக்கான சிறந்த ஆளுமைகள் தெரிவு செய்து அவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 
இந்த நிகழ்வில்  மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த சமூக ஆர்வ குறும்பட இயக்குனருக்கான விருது மன்னார் பேசாலை சேர்ந்த செல்வரெட்ணம் டிலக்சன் அவர்களுக்கும்  மன்னார் பேசாலை கிராமத்தை சேர்ந்த மார்கஸ் டிவைன்சி அவர்களுக்கு இளம் முயற்சியாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக தயாரிக்கப்பட்ட ‘மாய தோற்றம்’ மேலும் சமூக விழிப்புணர்வு சார்ந்த ஆவணப்படங்கள் என்பன உருவாக்கம் செய்து சமூக மட்டங்களில் காட்சிபடுத்தி வந்ததற்கு இந்த விருது சிறப்பாக  டிலக்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  கலைத்துறை சார்ந்த பலர் விருதை பெற்றுள்ளார்.

  குறிப்பாக ZEE தமிழ் புகழ் கில்மிஷா  சர்வதேச விருது பெற்ற லிப்சியா ஊடகவியலாளர் மற்றும் பல்துறை ஆளுமை மிக்க ஷர்மிளா வினோதினி என வட மாகாணத்தை சேர்ந்த பலரும் விருதை பெற்றுள்ளனர்.

 வவுனியாவில் விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த செல்வரெத்தினம் டிலக்சன்  குறும்பட இயக்கத்தின் மூலம்  சமூக மட்டத்தில் உருவாக்கியவர் இவர்  இளைஞர்களுக்கான விழிப்புணர்வு  ஊட்டும் வகையில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும்  மாணவர்களின்  கல்வியின்  முக்கியத்துவம் தொடர்பான  குறுந் திரைப்படங்களை இயக்கிய தொடு மட்டுமல்லாது மனித உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வு செயற்பாடுகளுடன்  என சமூகத்தோடு இணைந்து பயணித்து வருகிறார்.

மேலும் டிவைன் சி தனது கல்வியோடு சமூக சேவைகள், குறும்படம், நடிப்பு, புத்தகம், ஆக்கம், கவிதைகள் வெளியீடு என பல முயற்சிகள் எடுத்து வருகின்றார்.

 குறிப்பாக சுடரி கல்லிலே ஈரம் போன்ற குறும்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது  பாராட்டுக்களையும் பெற்றிருந்ததோடு இவர் சிறந்த மேடைநிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மன்னார் மாவட்டத்தில் வலம் வருபவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments