Friday, October 17, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsவெளிநாட்டவருக்கும் வேறு மாவட்டத்தை சேர்ந்தர்களுக்கும் விவசாய காணி சொந்த மக்களுக்கு காணி இல்லை!

வெளிநாட்டவருக்கும் வேறு மாவட்டத்தை சேர்ந்தர்களுக்கும் விவசாய காணி சொந்த மக்களுக்கு காணி இல்லை!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த ஏழை விவசாயிகள் தங்களுக்கான காணி உரிமையை கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரசாங்க அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈட்பட்டிருந்த அந்தோனியார்புரத்தை சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா இரண்டு ஏக்கர் காணி வீதம் வழங்குவதாகவும் அதன் ஊடக வாழ்வார செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதாகவும் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாக்குறுதியை அடிப்படையாக கொண்டு மக்கள் எந்த ஒரு காணி ஆவணங்களும் இன்றி பலவருடங்களாக அப்பகுதியில் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குறித்த காணிகளை அந்தோனியார்புர மக்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தை சாரத வவுனியா கொழும்பு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால் காணிகளை பண்படுத்து செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான காணியை தாங்கள் பூர்விகமாக பயன்படுத்திய காணியை தங்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர்களிடமும் பணம்படைத்தவர்களிடம் பணம் பெற்று கொண்டு காணி சீர்திருந்த ஆணைக்குழுவினர் அவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் V.S சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில்  இந்த நாட்டில் ஏழைகளுக்கு நீதியே இல்லையா,அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா,அரச அதிகாரிகளே துரோகத்திற்கு துணைபோகாதீர்கள்,தமிழ் அரசியல் வாதிகளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்களா போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனிடம் போராட்டகாரர்கள் கையளித்த நிலையில் இவ்வாறான காணி தொடர்பான பிணக்குகளை நீண்ட நாட்கள் முடிவுறுதமல் வைத்திருக்க முடியாது எனவும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலருக்கு காணி இல்லாத நிலையில் வேறு மாவட்டத்தையும் வெளிநாட்டையும் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை ஏற்க முடியாது எனவு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு குறித்த காணி விடயம் தொடர்பில் மாவட்ட செயலகம் சார்பாக அறிக்கை ஒன்று சமர்பிக்க உள்ளதாகவும் இன்றைய போராட்டம் தொடர்பிலான ஆவனங்களையும் அறிக்கையுடன் சமர்பித்து விரைவில் குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்கமான ஒரு முடிவை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்கஸ்,சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ்,முன்னாள் நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments