Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஉறுமய திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு 5,000 நிலப் பத்திரங்கள்!

உறுமய திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு 5,000 நிலப் பத்திரங்கள்!

“மரபுரிமை” வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சொத்துக்களின் பெறுமதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட “மரபுரிமை” வேலைத் திட்டத்தினால் மீண்டும் உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் “பரம்பரை” வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் இன்று (16) மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது டன், 442 காணி உறுதிப்பத்திரங்கள் இன்று ஜனாதிபதியினால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கான பணத்தை வழங்குவது தொடர்பான காசோலைகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

கடந்த மோசமான காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அழிவடைந்த விவசாய பயிர்களுக்கு விவசாய காப்புறுதி நட்டஈடு வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,,

கடந்த மாதம் வடக்கிற்கு வந்த போது மன்னாருக்கு வருவேன் என உறுதியளித்தேன். மன்னாரின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.

 வடக்கு பிராந்தியத்தில் சுமார் 90,000 குடும்பங்கள் காணி உரிமை கோருகின்றனர். 45,000 குடும்பங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி பத்திரப்பதிவு வழங்கும் திறன் கொண்டது. ஏனைய 45,000 குடும்பங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மற்றும் வடமாகாண சபைக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

1935ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் பெதுருதுடுவ தொடக்கம் தௌந்தர துடுவ வரையிலான சகல சமூகங்களுக்கும் காணி உரிமமாக மட்டுமே வழங்கப்பட்டது. எனவே, இந்த உரிமங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம். உரிமம் பெற்ற நிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அவர்களுக்கு நில உரிமை கிடைக்கவில்லை.

சில விவசாயிகள் 85 ஆண்டுகளாக நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்டில் காணி உரிமை இல்லாத குடும்பங்கள் சுமார் 20 இலட்சம் உள்ளன. உறுமய அவர்கள் சார்பாக இலவச காணி உரிமைத் திட்டத்தை நடை முறைப்படுத்தியது.

கோவிட் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டது சாமானியர்களே. நாடு திவாலான நிலையில் இருந்து மீண்டு வரும்போது அதன் பலன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக உறுமய வேலைத்திட்டம் மீண்டும் மக்களின் சொத்துக்களை பெருக்கி வருகிறது. 

ஆசியாவில் எந்த நாட்டிலும் மக்களுக்கு இலவச நில உரிமை வழங்கப்படவில்லை. எனவே உறுமய வேலைத்திட்டத்தை நாட்டில் ஒரு புரட்சியாக அறிமுகப்படுத்த முடியும்.

மேலும், மேல் மாகாணத்தில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமையை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பொருளாதார சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

அப்போது யுத்தம் காரணமாக வடக்கு மக்கள் வீடு, உடைமை, காணிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சாதாரணமாக வாழும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது. உங்களுக்குக் கிடைக்கும் இந்த நிலத்தை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்களும் நாடும் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்   காதர் மஸ்தான்  

மக்களின் காணி உரிமைப் பிரச்சனையை தீர்க்க இங்கு வந்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் கனவு என்று சொல்ல வேண்டும். இனிமேல் அந்த கனவு நனவாகும்.

ஜனாதிபதி தெளிவான பார்வையுடன் அனைத்து திட்டங்களையும் தயாரிக்கிறார். இந்த நாட்டின் உடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அரசியல் இலக்குகளை தவிர்த்து நாட்டு மக்களின் நலனுக்காக ஜனாதிபதி செயற்படுகின்றார். எனவே, நாம் அவரை மதிக்க வேண்டும். அதற்காக அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்

நாட்டை இருண்ட யுகத்தில் இருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் காணிப் பிரச்சனைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண செயற்பட்டு வருகின்றார். பிரச்சினைகளை பேசி தீர்வு காணக்கூடிய ஜனாதிபதி ஒருவர் எமக்கு கிடைத்துள்ளார்.

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இன்று இங்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்படுவது அவசியமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்    செல்வம் அடைக்கலநாதன், 

மன்னார் மாவட்ட வைத்தியசாலையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் மன்னார் மாவட்டத்தில் பல காணிப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்று இப்பிரதேசத்திற்கு வருகை தந்து அது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments