உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தையொட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(14) மன்னாரில் காலை முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் தேசிய இளைஞர் படையணியின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பங்கேற்புடன் மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் இளைஞர் யுவதிகள்,உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இதன் போது மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்கள், தேசிய இளைஞர் படையணி அதிகாரிகள், மற்றும் வைத்தியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.