ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னனியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக மன்னார் தபாலக ஊழியர்களாலும் சுகயீன விடுமுறைபோராட்டம் இடம் பெற்றுள்ளது.
தபால் துறையில் நிலவும் 5000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்பத்தவறியமை,உரிய பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்திற்கு அஞ்சல் அதிபர்கள் ஆதரவளிக்காத நிலையில் ஏனைய அஞ்சல் அலுவலக சேவைகள் மன்னார் மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.