மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழாவிற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று 11 (செவ்வாய்க்கிழமை) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2ஆம் தேதி திருவிழா நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.